மத்திய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவெனின் கூற்றுப்படி, மத்திய அரசு நிர்ணயித்த குறைக்கப்பட்ட மின் கட்டண விகிதங்களின் கீழ் நுகர்வோருக்கு அடுத்த ஆண்டு மத்தியில் நிவாரணம் கிடைக்கும். அதன்படி தற்போதுள்ள மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்காமல், அப்போதைய கட்டணத்துக்கு நிவாரணம் வழங்குவது அனேகமாக நடக்கும் என்றும் அமைச்சர் கூறினார். இருப்பினும், எரிவாயு மற்றும் நிலக்கரி மீது அதிகபட்ச விலை வரம்பை விதிப்பதன் காரணமாக ஆஸ்திரேலியர்கள் குறைந்தபட்சம் $230 கட்டண நிவாரணத்தைப் பெறுவார்கள் என்று அவர் கணித்துள்ளார். இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் மின்சார கட்டணம் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது, அடுத்த ஆண்டு மேலும் 30 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நுகர்வோரைக் காப்பாற்றும் நோக்கில், கட்டண நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்தார். கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், எரிசக்தி அமைச்சர்கள் மற்றும் தேசிய அமைச்சரவை ஆற்றல் கட்டணங்கள் தொடர்பாக 02 சுற்று முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியது. அங்கு எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை ஏற்க மத்திய நாடாளுமன்றம் வரும் வியாழக்கிழமை கூடுகிறது.
மின்சார கட்டண நிவாரணம் இன்னும் 06 மாதங்களில் காலாவதியாகிவிடும் – மத்திய அரசு தெரிவிப்பு!
-