குயின்ஸ்லாந்தின் உள்ளூர் நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 02 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய இடத்திற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் 04 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இறந்த பொதுமக்களில் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரண்டு சந்தேக நபர்களும் அவர்களுடன் இருந்த ஒரு பெண்ணும் அடங்குவர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் முன்னாள் அதிபர் மற்றும் அவரது சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றைய நபர் நிராயுதபாணியான பொதுமக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த இரு காவல்துறை அதிகாரிகளின் சார்பில், குயின்ஸ்லாந்து அரசு அலுவலகங்களில் இன்று மாநிலக் கொடி அரைக்கம்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உட்பட பல தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உட்பட 6 பேர் உயிரிழப்பு!
-