அவுஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர், அடுத்த வருடம் தாங்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு எனத் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு - எரிபொருள் மற்றும் மின்சார விலை அதிகரிப்பு, எரிவாயு கட்டண அதிகரிப்பு என்பனவே பிரதானமானவை என தெரிவித்துள்ளனர். Canstar நிறுவனம் 2000க்கும் மேற்பட்டவர்களை பயன்படுத்தி நடத்திய சர்வேயில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2017 இல் அவர்களால் நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்பில், 05 சதவீதமான ஒரு சிறிய சதவீதத்தினரே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை அவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு கணக்கெடுப்பில், 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது வாராந்த மளிகைச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். 28 சதவீதம் பேர் கடந்த ஆண்டைப் போன்றே சேமிக்கலாம் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.
2023இல் ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை – வெளியான ஆய்வு முடிவுகள்!
-