பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் முக்கிய இலக்கான எரிசக்தி கட்டணங்களை குறைக்கும் பிரேரணை நாளை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதற்குக் காரணம் பசுமைக் கட்சியின் ஆதரவு அறிவிப்புதான். தொழிற்கட்சி அரசாங்கத்தின் முயற்சியானது மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்து நுகர்வோருக்கு சில கட்டண நிவாரணங்களை வழங்குவதாகும். இதன் கீழ் சுமார் 03 பில்லியன் டொலர்கள் நிவாரணம் கிடைக்கவுள்ளதுடன், ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 230 டொலர்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தச் சட்டங்களை நிறைவேற்ற மத்திய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது.