நியூசிலாந்து அரசாங்கம் பல குடியேற்ற சட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாற்றத்தின் கீழ், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்கள் குடியேற்ற பசுமை பட்டியலில் (Immigration Green list) சேர்க்கப்படுவார்கள். அந்த தொழிலாளர்களுக்கு விரைவில் நியூசிலாந்து நிரந்தர குடியிருப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை, மருத்துவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்ட நிலையில், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களின் கடுமையான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நியூசிலாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த புதிய குடிவரவு சட்ட மாற்றத்தின் மூலம் ட்ரக் சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகளும் தற்காலிக நியூசிலாந்து வதிவிட விசாக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய குடியேற்ற சட்ட மாற்றத்தில் எதிர்காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ மெக்கானிக்களுக்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் குடிவரவு பசுமை பட்டியலில் (Immigration Green list) 10 வேலைத் துறைகளை சேர்க்க நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.