இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எரிசக்தி சட்டத்தின் பிரகாரம் எரிவாயு மற்றும் நிலக்கரியின் விலைகள் ஒரு வருட காலத்திற்கு அதிகபட்ச பெறுமதியில் பேணப்பட வேண்டும். இதன்படி, 1 ஜிகாஜூல் எரிவாயு அதிகபட்ச விலையாக 12 டொலர்களுக்கும், 01 தொன் நிலக்கரி 125 டொலர்களுக்கும் உட்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 28 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் செனட்டில் கிடைத்தன. எரிசக்தி கட்டண குறைப்பு முன்மொழிவை சட்டமாக நிறைவேற்ற மத்திய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின. அடுத்த வருடம் ஒரு குடும்பத்திற்கான மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணங்கள் அதிகரிப்பு சுமார் 930 டொலர்களாக இருக்கும் எனவும் அதனை 700 டொலர்களாகக் குறைக்க முடியும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.