எரிசக்தி கட்டண குறைப்பு முன்மொழிவை சட்டமாக நிறைவேற்ற மத்திய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின. தொழிற்கட்சி அரசாங்கத்தின் முயற்சியானது மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்து நுகர்வோருக்கு சில கட்டண நிவாரணங்களை வழங்குவதாகும். இதன் கீழ் சுமார் 03 பில்லியன் டொலர்கள் நிவாரணம் கிடைக்கவுள்ளதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 230 டொலர்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அடுத்த வருடம் ஒரு குடும்பத்திற்கான மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணங்கள் அதிகரிப்பு சுமார் 930 டொலர்களாக இருக்கும் எனவும் அதனை 700 டொலர்களாகக் குறைக்க முடியும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எரிவாயு மற்றும் நிலக்கரி கொள்வனவுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிப்பதும் இன்று முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் அடங்கும்.