Breaking Newsஇதுவே எனது கடைசி போட்டி – தனது ஓய்வை அறிவித்த மெஸ்ஸி

இதுவே எனது கடைசி போட்டி – தனது ஓய்வை அறிவித்த மெஸ்ஸி

-

உலகக்கிண்ண உதைபந்து தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியோடு அதாவது டிசம்பர் 18 ஆம் திகதியோடு ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிபடுத்தியுள்ளார்.

அர்ஜெண்டினா அணியின் தலைவரும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்றைய போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த மெஸ்ஸி 11 கோல்களை அடித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

உலகக் கிண்ணப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அடுத்த தொடர் வருவதற்கு பல வருடங்கள் ஆகும், என்னால் அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். இப்படி முடித்து கொள்வதே சிறந்தது என அவர் கூறினார்.

35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுகிறமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...