எரிசக்தி கட்டண குறைப்பு திட்டத்தை சட்டமாக நிறைவேற்ற மத்திய பாராளுமன்றம் இன்று கூடுகிறது. தொழிற்கட்சி அரசாங்கத்தின் முயற்சியானது மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்து நுகர்வோருக்கு சில கட்டண நிவாரணங்களை வழங்குவதாகும். இதன் கீழ் சுமார் 03 பில்லியன் டொலர்கள் நிவாரணம் கிடைக்கவுள்ளதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 230 டொலர்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எரிவாயு மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு அதிகபட்ச விலையை நிர்ணயிப்பதும் இன்று முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் அடங்கும். இதற்கு ஆதரவளிப்பதாக பசுமைக் கட்சி அறிவித்துள்ள நிலையில், பெரும்பான்மை வாக்குகளால் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த வாரம் தேசிய அமைச்சரவை மற்றும் மாநில எரிசக்தி அமைச்சர்கள் நடத்திய பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு, இந்த சட்டங்களை நிறைவேற்ற மத்திய நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
எரிசக்தி கட்டணங்கள் குறைப்பு திட்டத்தை நிறைவேற்ற இன்று கூடுகிறது மத்திய பாராளுமன்றம்!
-