அவுஸ்திரேலியாவில் வருடாந்தம் 65,000 தொழிலாளர்கள் முதியோர் பராமரிப்புத் துறையில் இழக்கப்படுவதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது. கடந்த 10 மாதங்களில் சுமார் 18,000 தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. தேவையான எண்ணிக்கையை விட சுமார் 35,000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் முதியோர் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு 05 ஊழியர்களில் ஒருவர் இந்த வருடத்திற்குள் சேவையை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக இவ்வருட ஆரம்பத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. வேறு துறைக்குச் சென்றால் அதிக சம்பளம் பெறலாம் என்ற கருத்துதான் இதற்குக் காரணம் ஆகும்.