Cinemaதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்!

-

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “ஜெயிலர்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ரஜினியின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுப்பொழிவுடன் வெளியிடப்பட்ட பாபா திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று இரவு திருமலை திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த ரஜினிக்கு திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு கூடிய ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு ரஜினி அழைத்து செல்லப்பட்டார்.

இன்று அதிகாலை தனது மகள் ஐஸ்வர்யா ரஜினியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

ரஜினியின் வருகையால் ரசிகர்கள் கூடியதால், நேற்று இரவு முதல் அதிகாலை வரை திருப்பதி பரபரப்புடன் காணப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...