குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறை, கோவிட் அறிகுறிகளைக் கொண்ட எவரும் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்நிலையைப் பார்க்க முதியோர் பராமரிப்பு மையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. காரணம், மாநிலத்தில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருந்து 14,941 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகமாகும். முந்தைய வாரத்தில் 15 கோவிட் இறப்புகள் மட்டுமே பதிவாகியிருந்தாலும், கடந்த வாரத்தில் அது 33 ஆக அதிகரித்துள்ளது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் முதியோர் பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தில் முதியோர் பராமரிப்பு மையங்களுக்கு வருபவர்களுக்கு விசேட அறிவித்தல்!
-