அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தேசிய திட்டத்தை உருவாக்க மாநில கல்வி அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். கான்பரா நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சர் ஜேசன் கிளார்க்குடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசிரியர்கள் ஆற்றும் பணி தொடர்பாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் போதுமானதாக இல்லை என இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க கல்வி அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்ட மற்றுமொரு முக்கிய விடயம் என்னவென்றால், 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 4000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் அதற்கான தீர்வுகள் உடனடியாகக் காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச புதிய சம்பள முறையின்படி, ஆசிரியரின் வருடாந்த சம்பளம் சுமார் 130,000 டொலர்களாக அதிகரிக்கும்.