கடந்த சனிக்கிழமை மெல்போர்னில் நடைபெற்ற A லீக் கால்பந்து போட்டியின் போது தவறாக நடந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அன்று கிட்டதட்ட 150 பேர் மைதானத்தின் நடுவில் புகுந்து மிகவும் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி ஒரு வீரர் மற்றும் ஒரு போட்டி நடுவர் காயமடைந்தனர். புகைப்படங்களில் உள்ள இருவர் ஏற்கனவே காவல்துறையிடம் வந்து வாக்குமூலம் அளித்துள்ளதாக விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், A-லீக் போட்டியின் போது மைதானத்தை முற்றுகையிடும் ரசிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று Football Australia உறுதியளிக்கிறது. அவர்களை மைதானங்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக Football Australia தெரிவித்துள்ளது.
A லீக் கால்பந்து போட்டியில் தவறாக நடந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில்!
-