தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (virtual care) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம். இது தொடர்பான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதன் வெற்றியின் அடிப்படையில், 10,000 குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்குச் செல்லாமலேயே மையத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெற முடியும் என்பதால், பெரும்பாலான முதியோர் பராமரிப்பு குடியிருப்பாளர்கள் புதிய திட்டத்தை விரும்புகின்றனர். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் செப்டம்பர் மாதத்தில் நோயாளிகள் 3,567 மணிநேரம் ஆம்புலன்ஸ்களில் செலவிட்டனர் என்பது சமீபத்தில் தெரியவந்தது.