Cinema“அவதார் 2” படத்தின் முதல் 3 நாட்களுக்கான வசூல் குறித்து வெளியான...

“அவதார் 2” படத்தின் முதல் 3 நாட்களுக்கான வசூல் குறித்து வெளியான தகவல்.

-

அவதார் 2 படத்தின் முதல் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம்.

25 கோடி அமெரிக்க டொலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டொலர் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் டிசம்பர் 16 ஆம் திகதி வெளியானது.

மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், அவதார் 2 வெளியான 3 நாள்களில் உலகளவில் இதுவரை 3,500 கோடி ரூபாவையும், இந்தியாவில் 160 கோடி ரூபாவையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Medicare காப்பீட்டு முறை பற்றி மருத்துவர்களிடமிருந்து ஒரு புகார்!

கடந்த 12 மாதங்களில் மருத்துவ காப்பீட்டு நிதியில் இருந்து 140 மில்லியன் டாலர்களை மருத்துவர்கள் பெறவில்லை என தெரியவந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் கடந்த...

உலகின் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்களில் ஆஸ்திரேலிய நிறுவனம்

இந்த ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை Airline Ratings நிறுவனம் செய்துள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான விமான சேவை நிறுவனமாக...

40 வருடத்தில் 12 முறை விவாகரத்து – $342,000 மோசடியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய தம்பதி

அவுஸ்திரேலிய தம்பதியினர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்து மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கும்...

படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் பெமி என்ற ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி...

வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பெயரில் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் பயிற்சியாளர் ஒருவரை அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் கட்டாய விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. பையத்லட்டுகள் பலர்...

படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் பெமி என்ற ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி...