Newsபதவி விலகுவதாக அறிவித்தார் எலோன் மஸ்க்!

பதவி விலகுவதாக அறிவித்தார் எலோன் மஸ்க்!

-

பொருத்தமான ஒருவரை கண்டறிந்த பின்னர், ட்விட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகவுள்ளதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

தான் ட்விட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டுமா? என்பது குறித்து எலோன் மஸ்க் தமது ட்விட்டர் கணக்கினூடாக கருத்து கணிப்பொன்றை நடத்தினார்.

”கருத்துக் கணிப்பு முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்” என்று மஸ்க் கூறினார்.

அதற்கமைய, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, 57.5% வாக்குகள் மஸ்க பதவி விலக வேண்டும் என்றும், 42.5% வாக்குகள் பதவி விலகும் யோசனைக்கு எதிராகவும் அளிக்கப்பட்டன.

17.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த வாக்களிப்பில் பங்கேற்றனர்.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் மேற்கொண்ட சில தீர்மானங்கள் பல்வேறு தரப்பினரையும், போட்டி சமூக ஊடக நிறுவனங்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையிலேயே, மஸ்க் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தார்.

கருத்துக் கணிப்பு முடிவினையடுத்து இன்று காலை ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள இலோன் மஸ்க், ”பதவியை பொறுப்பேற்கும் அளவுக்கு முட்டாள்தனமான ஒருவரை நான் கண்டுபிடித்த பின்னர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுகிறேன். அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேர்வர் குழுக்களுக்கு தலைமையாக செயற்படுவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

இளைஞர்கள் மத்தியில் அதிக தேவையுள்ள கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளுடன் கூடிய மின்-பைக்குகள்

இளம் ஆஸ்திரேலியர்களிடையே மின்-பைக்குகள் பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் பாதுகாப்பு கவலைகளும் அதிகரித்துள்ளன. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் காயங்கள், இறப்புகள் மற்றும் தீ விபத்துக்கள் பள்ளி...

விக்டோரியாவின் ஏலச் சட்டம் மாறுமா?

விக்டோரியாவில் ஏலச் சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவருவது குறித்து ஆலோசகர்கள் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். புதிய சட்டம், விற்பனையாளர்கள் ஏலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டின் இருப்பு விலையை...

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...