ஆஸ்திரேலியாவில், சில பெட்ரோல் நிலையங்கள் செலுத்தும் தொகையை விட குறைவாக எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் நடந்த மொத்த மோசடி சுமார் 29 மில்லியன் டாலர்கள் என சமீபத்திய தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
100 டாலர் மதிப்புள்ள எரிபொருளை வாங்கும் போது 30 முதல் 90 சென்ட் வரை மோசடி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாடு முழுவதும் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 5.7 வீதமானவையே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்த தணிக்கை அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என பல தரப்பினரும் கூறியதை அடுத்து, நுகர்வோர் அதிகாரசபை விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.