மெல்பேர்னில் நடைபெற்ற A லீக் கால்பந்தாட்ட போட்டியின் போது களத்தில் இறங்கிய மேலும் 08 பேரை கால்பந்தாட்ட அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது.
இதன்படி குறித்த தினத்தில் வன்முறையில் ஈடுபட்ட 10 பேருக்கு கால்பந்தாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
05 முதல் 20 வருடங்கள் வரை உதைபந்தாட்டம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இன்று தடை செய்யப்பட்ட 08 பேரும் 18 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக தடை விதிக்கப்பட்ட 02 வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.