கிறிஸ்துமஸ் அட்டைகள் மற்றும் மின்னணு பொம்மைகளில் காணப்படும் சிறிய பேட்டரிகள் குறித்து கூடுதல் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலிய பெற்றோர்களை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிறு குழந்தைகள் அவற்றை விழுங்குவதால் மருத்துவமனைகளின் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம்.
இவ்வாறான விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு வாரமும் சுமார் 04 சிறுவர்கள் அவசர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மருத்துவரின் கூற்றுப்படி, 30 மில்லிமீற்றருக்கும் குறைவான எந்த மின்னணு சாதனமும் 03 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறும் ஆஸ்திரேலிய பெற்றோர்களிடம் சுகாதார துறையினர் கூறி வருகின்றனர்.