இந்த கிறிஸ்துமஸில் ஆஸ்திரேலியர்களால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகை 21.5 பில்லியன் டாலர்களை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 04 வீத அதிகரிப்பாகும் என தேசிய சில்லறை சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு முன்னதாகவே ஆஸ்திரேலியர்கள் கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கைத் தொடங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் காலத்துக்காக நிவாரணம் கோரிய குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு விநியோகிக்கப்பட்ட உதவிகளின் எண்ணிக்கையை Salvation Army அதிகரித்துள்ளது.