இன்று 100,000 க்கும் மேற்பட்ட விமான பயணிகள் மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸுக்கு முன்னதாக விமான நிலையம் வழியாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணிக்கும் நாளாக நாளை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சிட்னி சர்வதேச விமான நிலையமும் இன்றும் நாளையும் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், கடந்த 03 ஆண்டுகளில் ஆஸ்திரேலியர்கள் எந்தவித கோவிட் விதிமுறைகளும் இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது இதுவே முதல் முறை.
மேலும், கிறிஸ்மஸ் விடுமுறைக்கு அதிகளவான மக்கள் தரை வழிகளை பயன்படுத்தி செல்வதால் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.