நியூ சவுத் வேல்ஸில் பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு செல்ல மறுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மனநலக் காரணங்களும், விடியற்காலை வரை வீடியோ கேம்களுக்கு அடிமையாகியிருப்பதும் முக்கியக் காரணங்களாகும் என அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்றுநோய்களின் போது வீட்டிலிருந்து படிப்பதால் இதுபோன்ற விஷயங்களுக்கு மாணவர்களின் அடிமையாதல் வேகமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
வகுப்பில் மாணவர்களால் ஒதுக்கப்பட்டமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல மறுப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றம் இந்த நிலைமை குறித்து விவாதிக்க சிறப்புக் குழுவையும் நியமித்துள்ளது.