ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மருந்தகங்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
குறிப்பாக பாக்டீரியா தொற்றுக்கு அமோக்ஸிசிலின் உள்ளிட்ட பல வகையான மருந்துகள் வழங்குவதில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த தட்டுப்பாடு வரும் பெப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான வலுவான தேவை உருவாக்கம் மற்றும் விநியோக பற்றாக்குறையால் இது முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 03 மாதங்களில் இந்தப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய மருந்துகள் அதிகார சபை (TGA) தெரிவித்துள்ளது.