கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது.
இதன்படி ACT பிராந்தியம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், நாளை 23ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 3ம் திகதி வரை வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.
அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.
வீதி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும்.
குறிப்பாக வாகனம் ஓட்டும் போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பிடிபடும் ஓட்டுநர்களுக்கு $352 அபராதம் (பள்ளி zoneஇல் $469) மற்றும் 10 demerit points தண்டனை விதிக்கப்படும்.
இதேவேளை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் double-demerit points தண்டனை நாளை 23ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 8 வரை நடைமுறையில் இருக்கும்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பண்டிகைக் காலத்திற்கென்று சிறப்பாக double-demerit points தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
NT, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் double-demerit points தண்டனை நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.