SportsIPL மினி ஏலம் இன்று ஆரம்பமானது!

IPL மினி ஏலம் இன்று ஆரம்பமானது!

-

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது.

ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சேம் கர்ரன் மற்றும் நிகோலஸ் பூரன், ஹெரி புரூக், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், தமிழக வீரர் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து மேலும் 87 வீரர்களை மாத்திரம் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இந்த ஏலத்தில் 10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு என்பது குறித்த விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.20.45 கோடி (இந்திய ரூபா)

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ரூ.42.25 கோடி (இந்திய ரூபா)

பஞ்சாப் கிங்ஸ் – ரூ.32.2 கோடி (இந்திய ரூபா)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ.23.35 கோடி (இந்திய ரூபா)

மும்பை இந்தியன்ஸ் – ரூ .20.55 கோடி (இந்திய ரூபா)

டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ .19.45 கோடி (இந்திய ரூபா)

குஜராத் டைட்டன்ஸ் – ரூ.19.25 கோடி (இந்திய ரூபா)

ராஜஸ்தான் ரோயல்ஸ் – ரூ .13.2 கோடி (இந்திய ரூபா)

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ .8.75 கோடி (இந்திய ரூபா)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ .7.05 கோடி (இந்திய ரூபா)

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...