SportsIPL மினி ஏலத்தில் அதிக விலைக்கு போன இரு வீரர்கள்.

IPL மினி ஏலத்தில் அதிக விலைக்கு போன இரு வீரர்கள்.

-

16 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று இடம்பெற்றது..

இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சேம் கரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சேம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.25 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இதேபோல் அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடி இந்திய ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

சேம் கரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐ.பி.எல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

சாம் கர்ரன் – 18.50 கோடி இந்திய ரூபா (பஞ்சாப் கிங்ஸ்)

கேமரூன் கிரீன் – 17.50 கோடி இந்திய ரூபா (மும்பை இந்தியன்ஸ்)

பென் ஸ்டோக்ஸ் – 16.25 கோடி இந்திய ரூபா (சென்னை சூப்பர் கிங்ஸ்)

ஹாரி புரூக்- 13.25 கோடி இந்திய ரூபா (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

ஜேசன் ஹோல்டர் – 5.75 கோடி இந்திய ரூபா (ராஜஸ்தான் ரோயல்ஸ்)

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

மெல்பேர்ணில் இரண்டு மாடி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெரிய கிடங்கில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் குறித்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பல முறை...