கிறிஸ்துமஸ் பரிசாக நாய்களை வழங்குவதை தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களிடம் விலங்குகள் நல அமைப்புகள் கூறி வருகின்றன.
பண்டிகைக் காலத்துக்குப் பிறகு சிலர் விலங்குகளைக் கைவிடுவதற்கு இதுவே காரணம்.
ஒவ்வொரு நாளும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நாய்களுக்கு புதிய தங்குமிடங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று விலங்குகள் நல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
2018 ஆம் ஆண்டில், கைவிடப்பட்ட நாய்களின் எண்ணிக்கை 581 ஆக இருந்தது, இந்த ஆண்டில், 852 நாய்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமை அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு மாநிலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையல்ல என விலங்குகள் நல அமைப்புகள் குறிப்பிடுகின்றன.