முன்னாள் காற்பந்து வீரர் பீலேவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
82 வயதாகும் விளையாட்டு வீரர் பீலேவுக்கு, பெருங்குடலில் சிறிய புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பீலேவின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக, மகள் கெல்லி நஸிமென்டோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நுரையீரல், இதய பிரச்னை தொடர்பான சிகிச்சைகளுக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை மருத்துவர்களின் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. பீலேவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பீலே குணமடைய வேண்டும் என்று உலகம் முழுவதுமிருந்து பிரார்த்தனைகள் குவிந்து வருகிறது.
உலகக்கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியில் மூன்று முறை பீலே இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.