Dating apps பயன்பாட்டில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் திருத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளை சந்தித்து விவாதிக்க மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் தயாராக உள்ளார்.
Dating apps-ன் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதே இதற்குக் காரணம்.
இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்துவதில் பாலியல் வன்முறை, பின்தொடர்தல், தாக்குதல் மற்றும் தகாத புகைப்படங்களைப் பகிர்தல் போன்றவை அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் முக்கால்வாசி பேர் கடந்த ஐந்தாண்டுகளில் ஆன்லைன் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது.
இவற்றில் 27% மது அருந்துதல் தொடர்பான கட்டாய சம்பவங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.