உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா வந்துள்ளார்.
10வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வெல்லும் நோக்கில் இந்த சீசனில் பங்கேற்கிறார்.
நோவக் ஜோகோவிச் முதலில் அடுத்த மாதம் முதல் தேதி அடிலெய்டில் தொடங்கும் டென்னிஸ் போட்டியிலும், பின்னர் மெல்போர்னில் ஜனவரி 16-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் டென்னிஸ் சீசனில் பங்கேற்க வந்த போதிலும், சரியான தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்யாமல் நாட்டிற்கு வந்ததால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
இதன்படி, நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதன் காரணமாக 03 வருடங்கள் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையை ஜோகோவிச் எதிர்கொண்டிருந்த போதும் அவருக்கு வீசா வழங்கப்பட்டதை தற்போதைய குடிவரவு அமைச்சர் அன்ட்ரூ கில்ஸ் அண்மையில் உறுதிப்படுத்தினார்.