சுமார் 400 மில்லியன் ட்விட்டர் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தில் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசனின் தனிப்பட்ட தரவுகளும் அம்பலமாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் மட்டுமின்றி பல பிரபல பிரமுகர்களின் தனிப்பட்ட தகவல்களும் இணையத்தில் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்காட் மோரிசனின் மின்னஞ்சல் முகவரி மட்டுமே இங்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் தொலைபேசி எண் உள்ளிட்ட பிற முக்கிய தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
குறித்த இணையத் தாக்குதலாளிகள் டுவிட்டர் நிறுவனத்திடம் இருந்து சுமார் 03 இலட்சம் டொலர்களை மீட்கும் தொகையை கோரியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை ட்விட்டர் சமூக வலைதளத்தில் விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.
பல நிமிடங்களுக்கு ட்விட்டரை அணுக முடியவில்லை என்று உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் தெரிவித்தனர்.