புதிய ஆஸ்திரேலியா-இந்தியா வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதால், ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்கள் இன்று முதல் பல சலுகைகளை அனுபவிப்பார்கள்.
அதன்படி, இந்த நாட்டில் உயர்கல்வியை முடித்த இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் அதிக காலம் தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.
டிப்ளோமா பாடநெறியை முடித்த ஒருவர் 18 மாதங்களும், இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த ஒருவர் 02 வருடங்களும், முதுகலைப் பட்டம் பெற்றவர் 03 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தத்தில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் ஆஸ்திரேலிய Working Holiday விசா பிரிவில் சேர்க்கப்படுவதும் அடங்கும்.
எவ்வாறாயினும், அடுத்த 02 வருடங்களுக்குள் இது நடைமுறைக்கு வரும்.
தகுதிவாய்ந்த இந்திய தொழில் வல்லுநர்களுக்கு ஆஸ்திரேலியாவின் Skilled விசா வசதியும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, இந்திய சமையல் கலைஞர்கள் மற்றும் யோகா கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.