Breaking Newsரிஷப் பண்ட் பயணித்த கார் விபத்தில் சிக்கியது!

ரிஷப் பண்ட் பயணித்த கார் விபத்தில் சிக்கியது!

-

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் வாகன விபத்தில் காயமடைந்துள்ளார்.

இவர் நேற்று ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்ல டெல்லியில் இருந்து பி.எம்.டபிள்யூ காரில் சென்றுள்ளார்.

அப்போது, உத்தரகாண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் அவரது கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. அவரது கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்ததுள்ளது. பின்னர் பண்ட் காரின் கண்ணாடியை உடைத்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட தகவலின்படி, ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது ரிஷப் பந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மேக்ஸ் டேராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சக்ஷாம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுஷில் நகர் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...