உதைபந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்சி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் செல்ல மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். இதனை ஸிவா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உதைபந்தாட்ட கோல்காப்பாளராக தனது விளையாட்டு பயணத்தைத் தொடங்கிய தோனி. பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் காப்பாளராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் ஐ.சி.சி நடத்தும் அனைத்து தொடர்களையும் வென்ற ஒரே தலைவரும் அவர்தான்.
தோனி மற்றும் மெஸ்சி இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதனை உலகக் கிண்ணத்தை வைத்தே ஓர் உதாரணமாக கூறலாம். இருவரும் தங்கள் நாடுகளை உலகக் கிண்ண தொடரில் வழிநடத்தி சம்பியன் பட்டம் வெல்லச் செய்தவர்கள். இருவருமே இறுதிப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள். அவர்கள் விளையாடிய விளையாட்டு மாத்திரமே இங்கு வேறுபடுகிறது.
இந்தச் சூழலில் உலகக் கிண்ண வெற்றிக்கு பிறகு தோனியின் ஏழு வயதான மகள் ஸிவாவுக்கு அர்ஜென்டினா அணியின் ஜெர்ஸியை தனது கையொப்பமிட்டு மெஸ்ஸி அனுப்பி உள்ளார்.
“Para Ziva என அவர் ஸ்பானிய மொழியில் எழுதி தனது கையொப்பமிட்டு இந்த ஜெர்ஸியை மெஸ்ஸி, ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். அதனை ஆசையுடன் ஸிவா அணிந்துகொண்டு ‘அப்பாவை போலவே மகளும்’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
நன்றி தமிழன்