Breaking Newsவிக்டோரியாவில் மீண்டும் அதிகரிக்கும் சாலை விபத்தில் உயிரிழப்புகள்!

விக்டோரியாவில் மீண்டும் அதிகரிக்கும் சாலை விபத்தில் உயிரிழப்புகள்!

-

2021ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு, விக்டோரியா மாநிலத்தில் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

2021 ஆம் ஆண்டில் மொத்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 233 ஆக இருந்தது, ஆனால் கடந்த ஆண்டு அது 240 ஆக அதிகரித்துள்ளது என்று விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2021 ஆம் ஆண்டில், உள்ளூர் சாலைகளில் சாலை விபத்துக்களில் 119 பேர் இறந்தனர், 2022 இல் அது 134 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2021 ஆம் ஆண்டில், விக்டோரியாவின் நகர்ப்புறங்களில் 114 சாலை விபத்து இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் கடந்த ஆண்டு அது 106 ஆக குறைந்துள்ளது என்று விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

தொலைபேசிகளைப் பயன்படுத்திகொண்டு வாகனம் ஓட்டுவதும், அதீத வேகமும் இந்த விபத்துக்களுக்கு முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாதது போன்றவை வேறு காரணங்கள் என விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...