ஆஸ்திரேலியாவில் கோவிட் காலத்தில் சிறிதளவு குறைந்திருந்த பிறப்பு எண்ணிக்கை மீண்டும் மீண்டுள்ளது.
கடந்த ஆண்டு பிறப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறுகையில், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நல்ல போக்கு.
இல்லையேல் சுமார் 10 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய பிரஜைகளின் வீதம் குறைவடையும் எனவும் குடியேற்றவாசிகளின் வீதம் மிக அதிகமாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையை சீராக வைத்திருக்க தேவையான தலையீட்டை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் உறுதியளிக்கிறார்.