Newsநல்லடக்கம் செய்யப்படுகிறது உதைபந்து ஜாம்பவான் பீலேவின் உடல்!

நல்லடக்கம் செய்யப்படுகிறது உதைபந்து ஜாம்பவான் பீலேவின் உடல்!

-

உதைபந்து உலகின் பிதாமகனும், உலகக் கிண்ண உதைபந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ வைத்தியசாலையில் உள்ள பீலேவின் உடல் இன்று காலை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் பீலேவின் உடல் அடங்கிய சவப்பெட்டி இன்று அங்குள்ள வீதிகள் வழியாக எடுத்து செல்லப்படும் போது, அவரது தாயார் 100 வயதான செலிஸ்டி அரன்டெஸ் வசிக்கும் இல்லத்தையும் கடந்து செல்ல இருக்கிறது. படுத்த படுக்கையாக, மகன் இறந்த தகவலை புரிந்து கொள்ளும் நிலையில் செலிஸ்டி இல்லை.

இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். ஏறக்குறைய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் இங்கு உள்ளன.

இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. உதைபபந்து நாயகன் பீலேவின் உடலுக்கு இலட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள அமெரிக்க நிறுவனம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து Reddit உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ரெடிட் நிறுவனம் இன்று...

AI கட்டிடக் கலைஞர்களை ஆண்டின் சிறந்த நபராக பெயரிட்ட Time பத்திரிகை

பல ஆண்டுகளில் முதல்முறையாக, Time பத்திரிகை தனது ஆண்டின் சிறந்த நபர் விருதை ஒரு தனிநபருக்கு அல்ல, மாறாக AI புரட்சியை வடிவமைத்து வேறு திசையில்...

துப்புரவு நிறுவன உரிமையாளர் மீது $1,000 பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம்

ஆஸ்திரேலியாவின் AFL கிளப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். எம்ஏ சர்வீசஸ் குழுமத்தின் உரிமையாளரான மிக்கி அஹுஜா,...

ஆஸ்திரேலிய சந்தையில் சாதனை அளவை எட்டியுள்ள ஸ்ட்ராபெரி

இந்த கோடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடி அலமாரிகள் ஏராளமாக ஸ்ட்ராபெர்ரிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் குளிர்ந்த மற்றும் ஈரமான வசந்த காலம்தான் இதற்குக் காரணம். தெற்கு...

ஆஸ்திரேலிய சந்தையில் சாதனை அளவை எட்டியுள்ள ஸ்ட்ராபெரி

இந்த கோடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடி அலமாரிகள் ஏராளமாக ஸ்ட்ராபெர்ரிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் குளிர்ந்த மற்றும் ஈரமான வசந்த காலம்தான் இதற்குக் காரணம். தெற்கு...

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரை வர்ணித்த ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற...