உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் கடத்தப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ட்விட்டர் சமூக வலைதளம் இது தொடர்பாக இதுவரை எதையும் அறிவிக்கவில்லை.
கடந்த டிசம்பரில் சுமார் 400 மில்லியன் ட்விட்டர் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் hack செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
கடந்த 9 மாதங்களில், பல்வேறு மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் 424.8 மில்லியன் டாலர்களை இழந்துள்ளனர் என்று சமீபத்தில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.