Breaking News"ஐஸ்" போதைப்பொருளுடன் ஆஸ்திரேலியாவிற்கு வரும் விமான பயணிகள்!

“ஐஸ்” போதைப்பொருளுடன் ஆஸ்திரேலியாவிற்கு வரும் விமான பயணிகள்!

-

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளுடன் அவுஸ்திரேலியாவுக்கு வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

10 நாட்களுக்குள் இவ்வாறு வந்த 03 ஆவது விமானப் பயணியும் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

66 வயதான அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சிட்னி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரிடம் இருந்து 02 கிலோ ஐஸ் வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக எல்லை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நபருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இருந்து 1.6 கிலோ கொக்கெய்னுடன் வந்த போர்த்துகீசிய பிரஜை ஒருவர் கடந்த 1ஆம் திகதி சிட்னி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதோடு, டிசம்பர் 28ஆம் திகதி கொக்கெய்னுடன் வந்த ஒருவர் சிட்னி விமான நிலையத்திலும் கைது செய்யப்பட்டார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...