Sportsதன் ஓய்வை அறிவித்த சானியா மிர்சா!

தன் ஓய்வை அறிவித்த சானியா மிர்சா!

-

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான 36 வயதான சானியா மிர்சா, கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.

இந்த நிலையில் சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பெப்ரவரியில் டுபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி போட்டியாகும்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டை நிறுத்திக் கொள்ள போகிறேன். டுபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி டுபாயில் பெப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டியோடு நான் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.எனக் கூறியுள்ளார்.

சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். 2011 பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் தோற்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். 2009-ல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றுள்ளார்.

எதிரிவரும் 16ஆம் திகதி மெல்போர்னில் தொடங்கவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில்  சானியா மிர்சா, கஸகஸ்தான் வீராங்கனை அனாடேனிலாவுடன் இணைந்து விளையாடவுள்ளார்.

கடந்த ஆண்டு சானியா மிர்சா அவுஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜூவ் ராமுடன் இணைந்து கால் இறுதி வரை முன்னேறி இருந்தார்.

ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா 2007ம் ஆண்டு 27வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். 2005ல் அமெரிக்க ஓபனில் 4வது சுற்று வரை முன்னேறியதே அவரது சிறந்த நிலையாகும். இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 24-வது வரிசையில் உள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...