அடிலெய்டு பேருந்து ஓட்டுநர்கள் ஊதிய உயர்வு மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்கக் கோரி வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
நாளை அதிகாலை 3 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக அடிலெய்ட் நகரில் சுமார் 70 வீதமான பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு காரணங்களால் பயணிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பஸ் சாரதிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 12 மாதங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பயணிகளுக்கு அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக அமர ரயில் மற்றும் டிராம் சேவைகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அடிலெய்ட் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.