2023-ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அவுஸ்திரேலியாவுக்கு 08வது இடம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்யலாம்.
அவுஸ்திரேலியாவுடன் கனடா, கிரீஸ், மால்டா ஆகிய நாடுகளும் 08ஆவது இடத்தில் உள்ளன.
இந்த ஆண்டும் ஜப்பான் பாஸ்போர்ட் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாக மாறியுள்ளது.
ஜப்பானிய குடியுரிமை பெற்ற ஒருவர் 193 நாடுகளுக்கு சுதந்திரமாக செல்லலாம் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன. உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளில் இலங்கை 100ஆவது இடத்தில் உள்ளது.
இலங்கை கடவுச்சீட்டைக் கொண்ட ஒருவர் உலகில் உள்ள 42 நாடுகளுக்கு சுதந்திரமாக பயணிக்க முடியும்.