ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் மாதாந்த பணவீக்கம் 7.3 வீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அக்டோபரில் 6.9 சதவீதமாக இருந்தது.
வீடுகள் – அத்தியாவசிய உணவுப் பொருட்கள் – பயணச் செலவுகள் போன்ற துறைகளில் விலைவாசி உயர்வால் இது முக்கியமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை அடுத்த மாதம் 7ஆம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கும் அடுத்த வட்டி விகித மாற்றத்தை நேரடியாகப் பாதிக்கும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.