Newsமக்களை சிரிக்க வைக்க லண்டனில் நடந்த வினோத செயல்!

மக்களை சிரிக்க வைக்க லண்டனில் நடந்த வினோத செயல்!

-

உலகம் முழுவதும் பல வினோத செயல்களில் அவ்வப்போது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு வரவேற்பும் காணப்படுகிறது. இதன்படி, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ஒரு பிரிவினர் மேற்கொண்ட ரயில் பயணம் பார்ப்போரை ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

அவர்கள், ரயில் நிலையத்திற்கு சென்று தங்களது காற்சட்டையை கழற்றி விட்டு, ரயிலில் ஏறுகின்றனர். எனினும், மேல்பகுதியில் குளிர்கால ஆடைகளுடன் காணப்படுகின்றனர். தொப்பி, கையுறை, தொப்பி போன்றவற்றை வழக்கம்போல் அணிந்து கொள்கின்றனர். காலணி போன்றவற்றையும் கூட அணிந்து உள்ளனர்.

அதன்பின் வழக்கம்போல், ரயிலில் அமர்ந்து புத்தகம் படிப்பது, தொலைபேசியை பார்ப்பது அல்லது இசையை கேட்பதில் அவர்கள் ஆழ்ந்து விடுகின்றனர்.

இந்த வித்தியாச செயலுக்கு என தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. மக்களை சிரிக்க வைக்க வேண்டும், பார்ப்பவர்களை புன்னகைக்க செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். உலகின் பல நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வினோத செயலை மக்கள் கடைப்பிடித்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உறுப்பினராக ஆக வேண்டியது இல்லை. இதில் ஈடுபட வேண்டுமென்றால், உங்களது காற்சட்டையை கழற்றி விட்டு ரயிலில் பயணம் செய்ய வேண்டும். அவ்வளவே. இதற்காக பணம் வசூலிக்கவோ, விழிப்புணர்வு ஏற்படுத்தவோ இல்லை என இந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

2002-ம் ஆண்டு முதன்முறையாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இந்நிகழ்ச்சி தொடங்கியது. அப்படியே சர்வதேச நிகழ்வாக பரவி விட்டது. முதலில் நடந்தபோது, பொலிஸார் தலையிட்டு சிலரை கைது செய்தனர். பின்பு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இந்த நடைமுறை ஆண்டுதோறும் சூடு பிடிக்க தொடங்கியது. குளிர்காலத்தில், அதுவும் ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவும் சூழலில் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது காண்போரை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...