வடக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனை ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க உயர்கல்வி மாணவர்களை பகுதி நேர வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.
பள்ளி நேரம் முடிந்த பின்னரே பணிக்கு நியமிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இப்பள்ளி மாணவர்கள், மருத்துவமனை கேன்டீன் – வரவேற்பு – சுத்தம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
மேலும், செவிலியர்களுக்கு உதவவும் அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இதுவரை 10 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப மேலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் வடக்கு விக்டோரியாவில் உள்ள சம்பந்தப்பட்ட வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
நர்சிங் படித்த மாணவர்களுக்கு முழுநேர வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றனர்.