ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் உருளைக்கிழங்கு தொடர்பான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம், ஆண்டு முழுவதும் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உருளைக்கிழங்கு பயிர் சேதமடைந்துள்ளது.
ரஷ்ய-உக்ரேனிய இராணுவ நிலைமை காரணமாக, எரிபொருள் உட்பட பிற விநியோக நெட்வொர்க்குகளில் ஏற்படும் தாக்கம் மற்றொரு காரணம் என்றும் சந்தை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இதனால் potato chips மற்றும் french fries-க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, இன்னும் சில மாதங்களுக்கு இது தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை சமாளிக்கும் வகையில், கோல்ஸ் பல்பொருள் அங்காடி சங்கிலி ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே நேரத்தில் வாங்கக்கூடிய french fries பொட்டலங்களின் அளவை 02 ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.