மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகைக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என்று அந்தோனி அல்பானீஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
பசுமைக் கட்சி மற்றும் லிபரல் கட்சியைச் சேர்ந்த சிலரும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மத்திய தேர்தலின் போது, மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரி உட்பட பல வரிகளை தளர்த்துவதாக அரசு உறுதியளித்திருந்தது.
மின்சார வாகனங்களின் விலையை ஆயிரக்கணக்கான டொலர்களால் குறைக்க முடியும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய வாகன விலைகளுக்கு இது நல்ல நிலைமையல்ல என பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் இதற்கு மத்திய நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
வரி குறைப்பை யாரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது சிக்கலாக உள்ளது என்றார்.