வருடாந்த Protection விசா ஒதுக்கீட்டை 50,000 ஆக அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய மத்திய அரசை மனித உரிமை அமைப்புகள் கேட்டுக்கொள்கின்றன.
மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய மத்திய அரசு 2021-22 காலகட்டத்தில் மியான்மர் பிரஜைகளுக்கு 1,600 Protection விசாக்களை வழங்கியுள்ளது.
மியான்மர் நாட்டவர்களுக்கு பாதுகாப்பு விசா வழங்கும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பல்வேறு வீசாக்கள் மூலம் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள 800க்கும் மேற்பட்ட மியான்மர் பிரஜைகள் Protection விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.