வேலை தேடுபவர் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான தீர்மானம் தொடர்பில் பல முன்னணி வர்த்தகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பல துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் போது சிலர் வேலை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இதேவேளை, பணியாளர்கள் பற்றாக்குறையினால் தமது வர்த்தக நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
02 வருடங்களாக சில வர்த்தக நிலையங்களுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என முன்னணி வர்த்தகர்கள் வலியுறுத்துகின்றனர்.
மின் கட்டண உயர்வு, பணவீக்கம் போன்றவற்றில் வணிக இடங்களை பராமரிப்பது மிகவும் கடினம் என்பதே அவர்களின் நிலைப்பாடு.